ADVERTISEMENT

ஜெயம் ரவியை இயக்கும் கிருத்திகா உதயநிதி?

Published On:

| By Jegadeesh

ஜெயம் ரவியின் புதிய படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாகவும், இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ‘இறைவன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

அதேபோல், அறிமுக இயக்குநரான ஆண்டனி பாக்யராஜுடன் இணைந்து ஜெயம் ரவி நடிக்கும் ’சைரன்’ படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக ’வணக்கம் சென்னை’, ‘பேப்பர் ராக்கெட்’ மூலம் ரசிகர்களை கவர்ந்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.
இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும், இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

சித்தராமையா பதவியேற்பு விழாவில் ஸ்டாலின்

பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”: நல்லக்கண்ணு பாராட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share