தமிழ் திரையுலகில் இருக்கிற கமர்ஷியல் சினிமா இயக்குனர்களில் தனக்கென்று ‘தனித்துவமான’ பாணியைக் கொண்டவர் மோகன் ராஜா.
பிரமாண்டமான தயாரிப்புகளாக இவர் இயக்கியவை இருந்தாலும், அவை ‘வெரைட்டியான’ கதையம்சத்தோடு இருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
குறை சொல்ல முடியாத வகையில் ‘ரீமேக்’குகளை உருவாக்குகிற சாமர்த்தியமும் இவரிடம் உண்டு. ‘அது போதுமே’ என்று சொல்கிற வகையில் ‘தனி ஒருவன்’ தந்தார். Thani Oruvan 2 Movie Announcement
2015ஆம் ஆண்டில் ‘தனி ஒருவன்’ வந்தது. அதற்கு முன்னர் ‘ஹனுமான் ஜங்ஷன்’ தொடங்கி ’வேலாயுதம்’ வரை ஏழு படங்களை இயக்கியிருந்தார் மோகன் ராஜா. ஆனால், அந்த படமே ஒரு இயக்குனராக அவரை ரசிகர்கள் கொண்டாடச் செய்தது.
தினசரி வாழ்வில் நாம் கேட்கிற, பார்க்கிற, படிக்கிற, எதிர்கொள்கிற சில செய்தித் தகவல்களுக்குப் பின்னிருக்கும் உண்மைகள் இப்படியும் இருக்கலாம் என்கிறரீதியில் அமைந்த ‘தனி ஒருவன்’ கதை சொல்லலே அதற்குக் காரணம். அது, சாதாரண பார்வையாளர்கள் ஒரு செய்தியை நோக்குகிற விதத்தை மாற்றியமைத்தது.
பிறகு ‘வேலைக்காரன்’ எனும் அசல் கதையை இயக்கினார் ராஜா. அது ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றது. நல்லகண்ணு போன்ற பொதுவுடமைச் சித்தாந்தங்களை வாழ்வில் பின்பற்றுகிற தலைவர்கள் பாராட்டுகளைப் பெற்றது.
அதையடுத்து, மீண்டும் ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘காட்பாதர்’ரை இயக்கினார் மோகன் ராஜா. அதற்கு முன்னரே, மீண்டும் ஜெயம் ரவி உடன் இணைந்து ‘தனி ஒருவன் 2’வை அவர் தரப் போவதாகச் செய்திகள் வந்தன. இடையே, ஒரு அறிவிப்பு வீடியோவும் கூட வெளியானது.

ஆனாலும், ’தனி ஒருவன் 2 திரைப்படம் கிணற்றில் கிடக்கிற கல்லாக இருக்கிறது; அது எப்போ வரும்’ என்று ரசிகர்கள் வருத்தங்களைக் கொட்டி வந்தனர் நீண்ட நாட்களாக. இந்த நிலையில், அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், மிகப்பெரியதாக உருவாகிற அப்படத்தின் அறிவிப்பை வெளியிடச் சரியான நேரம் பார்த்துக் காத்திருப்பதாகவும் ’தனி ஒருவன்’னை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் தகவல் சொல்லப்பட்டது. Thani Oruvan 2 Movie Announcement
இதற்கிடையே, ‘குட் பேட் அக்லி’க்கு பிறகு அஜித் நடிக்கிற அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்கப் போகிறார் என்ற தகவலும் கசிந்து வருகிறது. அது எந்தளவுக்கு உண்மை என்பது படம் சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும்.
இன்று மோகன் ராஜாவின் 51வது பிறந்தநாள். அந்த கொண்டாட்டத்திற்கு நடுவே, தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த முதல்கட்டத் தகவல்களை இன்று அவர் பகிர்வது சரியாக இருக்கும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு. அது மெய்யாகுமா, பொய்யாகுமா..?!
Thani Oruvan 2 Movie Announcement

