பான் இந்தியா படமாக உருவாகும் ’ஜீனி’

Published On:

| By Kavi

ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு, ‘ஜீனி’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில்  நடைபெற்றது.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  ஐசரி கே. கணேஷ்  தயாரிக்கிறார்.

ADVERTISEMENT

இயக்குநர் அர்ஜுனன் ஜெ.ஆர். இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜெ. குமார் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ்  மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT

அதிரடியான சண்டைக் காட்சிகளை சர்வதேச சண்டை பயிற்சி கலைஞரான யானிக் பென் அமைக்க, ஸ்வப்னா ரெட்டி ஆடை வடிவமைப்பாளராக  பணியாற்றுகிறார். 

‘ஜீனி’ படம், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25 வது படம் என்பதால்…, மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராவதுடன், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.

ADVERTISEMENT

இராமானுஜம்

‘ஆர் யூ ஓகே பேபி’ : தலைப்பு வைத்தது எப்படி? -லட்சுமி ராமகிருஷ்ணன்

செந்தில்பாலாஜி வழக்கு… மூன்றாவது நீதிபதி: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share