ஜெயலலிதா பிறந்தநாள் : மோடி புகழாரம்!

Published On:

| By Kavi

Jayalalitha birthday Modi praise

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். Jayalalitha birthday Modi praise

முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, கேக் வெட்டி கொண்டாடினார்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் இனிப்புகள், நலத் திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.

சென்னை காமராஜர் சாலையில், தமிழ்நாடு உயர் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 24) மாலை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை கூறி வருகிறது.

இந்தநிலையில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தமிழில் புகழாராம் சூட்டியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. Jayalalitha birthday Modi praise

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share