“சிலர் மைக்கை பார்த்தாலே டென்ஷன் ஆகின்றனர்” – ஜெயக்குமார்

Published On:

| By Kalai

Jayakumar teases about Annamalai

பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே சிலர் டென்ஷன் ஆவதாக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னை மதுரவாயல்  அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின் உட்பட பல அதிமுக பிரமுகர்கள் கலந்து கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் “ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுவதாகவும், ஆளுநர் குறித்து திமுகவினர் ஒருமையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோபத்தை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பண்போடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிலர் பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆவதாக பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தார்.

ADVERTISEMENT

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், சசிகலா, தினகரன்,ஓபிஎஸ் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு எனவும் தமிழக மக்களுக்கு எந்த வாழ்வும் இல்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார் பொதுக்குழுவால்  நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மூடப்பட்ட அதிமுக கதவுகள் மீண்டும் திறக்காதென திட்டவட்டமாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதாக கூறிய அவர், இது பற்றி பேசுவதற்கு ஆளுநர் டெல்லி சென்றிருப்பதாகவும், ஆனால் திமுக கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே ஆளுநர் விசாரணைக்காக டெல்லி சென்றிருப்பதாக பொய்யான பிம்பத்தை திமுகவினர் ஏற்படுத்துவதாகவும்  சாடியுள்ளார்.

கலை.ரா

பீதியை கிளப்பிய பிரேஸ்வெல்… ‘த்ரில்’ வெற்றியை போராடி பெற்ற இந்தியா

சேகுவாரா மகள் என்பதில் பெருமை இல்லை”- அலெய்டா சேகுவாரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share