ஓடிடியில் சாதனை படைத்த ஜவான்

Published On:

| By Selvam

jawan movie ott record

நெட்ஃபிளிக்ஸ் வலைதளத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பெற்று ஜவான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

செப்டம்பர் 7-ஆம் தேதி ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய்சேதுபதி நடிப்பில் அட்லீ இயக்கிய ஜவான், அனைத்து மொழிகளிலும் உலகளவில் ரூ.1,100 கோடி மொத்த வசூல் செய்து சாதனை படைத்தது.

ADVERTISEMENT

மூன்று மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 2 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த படம் குறித்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஜவான் 2 வாரங்களில், உலகளவில் டாப் 10 படங்கள் (ஆங்கிலம் அல்லாத) பட்டியலில் உள்ளது.

அதேபோல் நெட்ஃபிளிக்ஸில் வெளியான இரண்டு வாரங்களில், படம் 37,00,000 பார்வைகளை பெற்றுள்ளது. மற்றும் 1,0,600,000 மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள ஒரே ஒரு இந்தியத் திரைப்படம் இறுகபற்று என்ற தமிழ்த் திரைப்படம் ஆகும், இது 12,00,000 பார்வைகளையும் 3,000,000 மணிநேரம் பார்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே ஜவான் படம் குறித்து ஷாருக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெட்ஃபிளிக்ஸில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் ஜவான் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு இந்திய சினிமாவின் புத்திசாலித்தனத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share