வசூல் : பதானை முறியடித்த ஜவான்!

Published On:

| By Kavi

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல்நாள் உலகம் முழுவதும் 129 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தி சினிமாவில் முதன்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, தீபிகா படுகோனே,விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு  அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களை ஜவான் பெற்றுவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் 75 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.129.6 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான பதான் முதல் நாளில் இந்தியாவில் 57 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில் அந்த சாதனையை ஜவான் படம் முறியடித்துள்ளது.

மேலும் இதுவரை வெளியான அனைத்து இந்தி படங்களின் முதல்நாள் வசூலையும் ‘ஜவான்’ முறியடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமானுஜம்

ஜி20 விருந்து: மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு இல்லை!

சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் மாரிமுத்து உடல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share