பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைத்த ஜவான்

Published On:

| By Selvam

ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7 அன்று வெளியான ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெளியான 11 நாட்களில் ரூ. 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் இந்திபடம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்‘ திரைப்படத்தை நாடு முழுவதும் உள்ள ஷாருக்கானின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படம் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்திய ஜவான் தற்போது ரூ. 400 கோடியை மிக வேகமாக கடந்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

ADVERTISEMENT

Jawan box office collection Report

இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் இந்தி மொழியில் மட்டும் ரூ.430.44 கோடிகளை வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழ் உள்ளிட்ட வேறு அனைத்து மொழிகளையும் சேர்த்து , ‘ஜவான்’ திரைப்படம் ரூ. 479.99 கோடி ரூபாயை நிகர வசூலாக பெற்றுள்ளது.‌ தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் இந்த திரைப்படம் ரூ. 49.55 கோடி ரூபாயை நிகர வசூலாக பெற்றுள்ளது. இந்தியில் வெளியாகி வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஒன்று.. இந்த அளவிற்கு வசூல் செய்தது சாதனையாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஜவான்திரைப்படம் வெளியாகி இரண்டாவது வார இறுதியில் கூட பாக்ஸ் ஆபிஸில் வலுவாக வசூல் செய்து வருகிறது. இரண்டாவது வார இறுதியில் இந்தியில் மட்டும் ரூ. 82 கோடியே 46 லட்சத்தை வசூலித்திருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் இரண்டாவது வார இறுதியில் மொத்தம் ரூ. 88 கோடியே 66 லட்சத்தை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

ADVERTISEMENT

இராமானுஜம்

ரூ.900 கோடி வசூலை நெருங்கும் ‘ஜவான்’!

மகளிர் மசோதா: கனிமொழி எழுப்பும் கேள்விகள்!

கொரோனா குமார் பட வழக்கு: சிம்பு பதில் மனுத்தாக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share