–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
நன்மைகள் தொடர்ச்சியாக வரும் காலகட்டம். அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். யாரிடமும் வீண் சச்சரவு வேண்டாம். மேலதிகாரிகளிடம் பணிவே நல்லது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்.
வீட்டில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
வழக்குகளில் சாதகமான தீர்வு கிட்டும்.
வாரிசுகளால் பெருமை சேரும். சுபகாரியங்களில் வீண் செலவைத் தவிருங்கள்.
செய்யும் தொழிலில் நிதானமான போக்கு நிலவும். புதிய முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.
அரசு, அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு தொடரும்.
பொது இடங்களில் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள்.
கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வந்து சேரும்.
மாணவர்கள் சோம்பலை விரட்டினால் சாதனைகள் படைக்கலாம்.
புறம்பேசிவோரை உடனே விலக்குங்கள்.
நரம்பு, தலைவலி, அலர்ஜி உபாதைகள் வரலாம்.
வாகனத்தில் வேகம் கூடாது.
மகாலட்சுமி வழிபாடு மங்களங்கள் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணே வராரு வழி விடு… GOAT டிரெய்லர் எப்படி?
இவரைப் போல கேர்ள் ப்ரெண்ட் வேண்டும்… யார் இந்த ‘நடிப்பு ராட்சசி’ நித்யா மேனன்?