இயக்குநர் ஜேசன் சஞ்சயின் ‘ஹீரோ’ இவர்தான்?

Published On:

| By Manjula

jason sanjay dulquer salmaan

ஜேசன் சஞ்சயின் அறிமுக படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2௦23-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி, ‘தளபதி’ விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என, லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

jason sanjay dulquer salmaan

கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடந்தும் கூட படத்தின் ஹீரோ குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. லைகா நிறுவனமும் அதற்கு அடுத்து படம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது.

இதற்கிடையில் படத்தின் அப்டேட்டினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களும், ஒருகட்டத்தில் அலுத்துப் போய் ‘வர்றப்போ வரட்டும்’ மோடுக்கு போய்விட்டனர்.

இந்தநிலையில் ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோ குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி மலையாளத்தின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் இதில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

jason sanjay dulquer salmaan

தற்போது படத்தின் முழுக்கதையையும் சஞ்சய் எழுதி விட்டதாகவும், ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பினை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை லைகா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வி.சேகருக்கு வெளிச்சம் கொடுத்த ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’

விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share