அலைச்சறுக்கு போட்டி: ஜப்பான் வீரர் வெற்றி!

Published On:

| By Monisha

world surfing compettition

மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற சர்வதேச அலைச்சறுக்கு இறுதிப்போட்டியில் ஜப்பான் சாம்பியன் பட்டத்தை வென்றது.

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் மல்மோரீஸ் கடற்கரை வளாகத்தில் அலைச்சறுக்கு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் மகளிர் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனைகள் ஷினோ மட்சுடா, சாரா வக்கிடா மோதினர்.

ADVERTISEMENT

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 13.50 புள்ளிகள் எடுத்து ஷினோ மட்சுடாவை 0.40 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாரா வக்கிடா மகளிர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர் பிரிவிலும் ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன் பட்டம் வென்றார்.

ADVERTISEMENT

மோனிஷா

உத்தரபிரதேச ஆளுநரை சந்தித்த ரஜினி

பாஜகவில் இணைந்த நெல்லை முன்னாள் மேயர்!

Photo of author
Monisha
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share