எலெக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுஃபேக்சரிங் நிறுவனம் சென்னையில் ஆலை அமைக்கிறது. சென்னையில் அமைக்கப்படும் இந்த ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். japan ceramic capacitors in chennai
செராமிக் கெபாசிட்டர்கள் என்பது பீங்கான் மின்தேக்கிகள் ஆகும். பெரும்பாலான மின்கருவிகளில் பயன்படுத்தப்படும் இந்த மின்தேக்கிகள், மின் விநியோகத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களைச் சீராக்குதல், சிக்னல்களை வடிகட்டுதல், ஆற்றலை சேமித்தல் போன்ற பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட செராமிக் கெபாசிட்டர்களைத் தயாரிக்க, எலெக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுஃபேக்சரிங் நிறுவனம் சென்னையில் ஆலை அமைக்கிறது.
இந்த முராட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது.
தற்போது, சென்னையில் அமைக்கப்படும் ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும். ஜப்பானைச் சேர்ந்த முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. மல்டிலேயர் செராமிக் கேபாசிட்டர் என்ற உதிரிபாகத்தை இந்த ஆலையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.