‘அழியாதது இந்த வாளின் கதையே’ : ஜனநாயகன் செகண்ட் சிங்கிள்!

Published On:

| By Kavi

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இரண்டவாது சிங்கிள் வெளியாகியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கான ப்ரோமோ நேற்று வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று காலை விஜய் ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், மாலையில் அவரது படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

“ஒரு பேரே வரலாறு பாடலை” விவேக் எழுதியிருக்கிறார். இதனை, விஷால் எம்.மிஷ்ரா ஆகியோர் பாடியிருக்கின்றனர். அனிருத்தின் இசையில் இப்பாடல் உருவாகியிருக்கிறது. 

ADVERTISEMENT

விஜய்யின் அரசியல் பயணத்துக்கு ஏற்றது போல் இந்த பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.

Jana Nayagan – Oru Pere Varalaaru Lyrical | Thalapathy Vijay | H Vinoth |Anirudh |KVN |Vishal Mishra

‘மக்கள் நினைக்காமல் ஒரு மாற்றம் பிறக்காது’, ‘அழியாதது இந்த வாளின் கதையே’, ‘களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே!’ உள்ளிட்ட வரிகளை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் இந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

செகண்ட் சிங்கிள் வெளியான ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share