ஜனவரி 9 சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அப்பாவு அறிவிப்பு

Published On:

| By Minnambalam

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 18 மற்றும் 19ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (டிசம்பர் 26) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவைகூட உள்ளது.

ADVERTISEMENT

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் 9ஆம் தேதி பேரவை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, 9ஆம் தேதி நடைபெற உள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து வரலாம். என்றாலும் கட்டாயமில்லை.

ADVERTISEMENT

புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஜெ.பிரகாஷ்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி-சி‌.வி. சண்முகம்… இடையில் என்ன நடக்கிறது?

இந்து வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைக்கச் சொன்ன பாஜக எம்.பி.

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share