பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக நாளை (ஜனவரி 12) அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. மேலும், இதற்கான விநியோகம் நேற்று (ஜனவரி 10) முதல் ஜனவரி 14-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
ரொக்கத்தொகையை பெறுவதற்கான டோக்கன்கள் ஜனவரி 7 முதல் வழங்கப்பட்டன. டோக்கன்கள் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கிழங்கான் மீன் வறுவல்
தெய்வம் தந்த வீடு… வீதி இருக்கு: அப்டேட் குமாரு
முடிந்தது ஷூட்டிங் : லேட்டஸ்ட் கங்குவா லுக் வெளியிட்ட சூர்யா
