மிகப்பெரிய ஜனநாயகன் பிரதமர் மோடிதான் : காங்கிரஸுக்கு தமிழிசை பதிலடி!

Published On:

| By Kavi

சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று விஜய்க்கு அதரவு தெரிவிக்கும் காங்கிரஸுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடிக்கும், மத்திய சென்சார் போர்டுக்கும் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் காங்கிரஸுக்கு முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் இன்று (ஜனவரி 8) தனது எக்ஸ் பதிவில், “இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி… ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் தான்…

ADVERTISEMENT

ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்…

நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்டுக்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை… திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு..

இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்… எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் இளங்கோவன் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார்.

அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும்.. திரையரங்குகள் கிடைக்க செய்வதில் கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை…

சட்ட ரீதியாக CBFC.. செயல்படுகிறது அதன் நடைமுறையை அரசியலாகி கொண்டு இருக்கிறார்கள்… விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை…

சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல… சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share