ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’, கடந்த ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு உடனடியாக ‘UA 16+’ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மத்திய திரைப்பட சென்சார் வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் குடியரசு தின விடுமுறை முடிந்து ஜனவரி 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
