ஜம்மு காஷ்மீர் தேர்தல்: இரண்டு தொகுதிகளிலும் ஓமர் அப்துல்லா முன்னிலை!

Published On:

| By Minnambalam Login1

jk elections results

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  இன்று (அக்டோபர் 8) நடந்து வருகிறது. இதில் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டமாக நடந்தது. முதல் கட்டத்தில் 61%, இரண்டாம் கட்டத்தில் 57% மற்றும் மூன்றாம் கட்டத்தில் 69.65% வாக்குகள் பதிவானது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாஜக தனித்துப் போட்டியிட்டது.

தற்போது உள்ள நிலவரப்படி, 47 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி முன்னிலையில் உள்ளது. பாஜக 28 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதுபோக மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கந்தர்பால் மற்றும் பட்காம் தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். கந்தர்பாலில் 2281 வாக்குகள் வித்தியாசத்தில் மற்றும் பட்காம் தொகுதியில் 4511 வாக்கு வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார்.

இதற்கிடையே, “வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதில் எந்த குளறுபடியும் நடக்கக்கூடாது” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று(அக்டோபர் 8) அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

47 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி முன்னிலையில் உள்ளதால், இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

சடாரென்று பிரேக் போட்ட தங்கம் விலை! இன்று சவரன் எவ்ளோ?

வினேஷ் போகத் முன்னிலை… 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலானா தொகுதியை கைப்பற்றும் காங்கிரஸ்?

10 கோடி பார்வைகளை கடந்த ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share