பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் அருணுக்கும் மஞ்சரிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
அது பற்றி கடந்த சனிக்கிழமை விஜய் சேதுபதி விசாரிக்கும் போது, அவர் மஞ்சரியை டார்கெட் செய்து பேசியது குறித்து பிரபல இசை அமைப்பாளரும் பிக் பாஸ் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் நீண்ட பதிவு வெளியிட்டு கண்டித்துள்ளார்.
அதில்’ தொடக்கத்தில் விஜய் சேதுபதி இயல்பான அதிரடியான பாணியை கண்டு வியந்தவரும் பாராட்டியவர்களும் இன்று வெறுப்படையும் நிலைக்கு சென்று இருக்கின்றனர்.
போட்டியாளர்களிடம் உரையாடும் போதும் பிரச்சனைகளை ஆராய்ந்த போதும் கமலஹாசனிடம் பண்பு இருந்தது, முதிர்ச்சி இருந்தது, ஞானம் இருந்தது. மதி நுட்பம் இருந்தது, சமூகப் பொறுப்பு இருந்தது, ஒவ்வொருவரையும் ஆளுமைகளாகவே பார்த்தார், கையாண்டார். அவர்களை நேரடியாக குற்றப்படுத்தியது இல்லை. சொற்கள் காயப்படுத்தியதில்லை, மட்டுப்படுத்தியது இல்லை. தனிப்பட்ட விதத்தில் தாக்கியது இல்லை.
அவர்கள் உணர்வுகளை சீண்டியதில்லை. உயர் பொறுப்பை கொண்டு அவர்களை சிறுமைப்படுத்தியது இல்லை. இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும். இது ஆணாதிக்க உலகம். நம் தமிழ் சமூகம் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதன் நிரூபணத்தை இந்த வீட்டில் 55 நாட்களாக கண்கூடாக கண்டு வருகிறோம்.
தன்னை கேள்வி கேட்கிற விமர்சிக்கிற பெண்ணை எப்படி ஆண்கள் எல்லாம் ஒன்று சேர்த்து கடுமையாக, தாக்கி நிலைகுலைய செய்து மகிழ்கிறார்களோ அதையே நிகழ்ச்சி தொகுப்பாளரும் செய்தது நம்மை அச்சப்பட வைத்திருந்தது.
இவர் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறார் என்பது ஒருபுறம். அதோடு நிற்கவில்லை. வெறிபிடித்த விலங்குகள் போல சுற்றி நின்று அந்த பெண்ணை உணர்வளவில் சின்னாபின்னாமாக்கிய அந்த ஆண்களை பாராட்டி பிக் பாஸ் வரலாற்றிலேயே சிறந்த பங்கேற்பாளர் என்கிற பட்டத்தையும் வழங்கியது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
விவாத மேடையா? குத்துச்சண்டை மேடையா? – அப்டேட் குமாரு
விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் : எடப்பாடி
Comments are closed.