டிரம்ப் விவகாரத்தில் ஏன் இவ்வளவு அமைதி? – மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

Published On:

| By Selvam

“இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்வதைப் பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்?” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (மே 22) கேள்வி எழுப்பியுள்ளார். Jairam Ramesh asks why modi silent on trump

இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் இன்று ஏஎன்ஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “கடந்த 11 நாட்களில் 8-வது முறையாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிடிட் எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஆகிய இருவரையும் சமமாகப் பாராட்டி, அவர்களை எல்லா வகையிலும் சமமாக நிலைநிறுத்தியுள்ளார். இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாக கருத வேண்டுமா?

இருநாடுகளையும் போர் நிறுத்தம் தொடர்பாக அறிவிக்க, அமெரிக்காவுடனான வர்த்தகமே தான் பயன்படுத்திய கருவி என்பதை மீண்டும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்ப்பின் சிறந்த நண்பரான பிரதமர் மோடி, அவர் சொல்வதை பற்றி பேசாமல் அமைதியாக இருக்கிறார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் தொடர்ந்து அமைதியைக் கடைப்பிடித்து வருகிறார்.

ஏன் இவ்வளவு அமைதி? இந்த கேள்விக்கு மோடி பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக, வெளிநாடுகளுக்கு எம்.பி-க்கள் குழுவை மோடி அனுப்பியுள்ளார்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். Jairam Ramesh asks why modi silent on trump

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share