வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் சிறை!

Published On:

| By Kavi

Jail for forced debt collection

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 26) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். Jail for forced debt collection

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று, உதயநிதி ஸ்டாலின், கடன் கொடுத்த நிறுவனங்கள் மக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு துன்புறுத்துவதை தடுக்கும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கூலி வேலைக்கு செல்பவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கு இரையாகி கடன் சுமைக்கு ஆளாகுகின்றனர்.

கடன் நிறுவனங்கள் கடன் வசூலிக்க முறையற்ற வழியை பின்பற்றுகின்றனர்.

ADVERTISEMENT

மசோதா என்ன சொல்கிறது? Jail for forced debt collection

இதனால் கடன் பெற்றவர்கள் சில நேரங்களில் தற்கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற துயரங்களை தடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. எனவே இனி வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.

ADVERTISEMENT

வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. 

அதுபோன்று கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயர் ஒருவர் நியமிக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Jail for forced debt collection

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share