ஜெய் பீம் கதைக்களம்!

Published On:

| By Balaji

சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்துப் படத்தின் உரிமையை வாங்கியுள்ள அமேசான் வெளியிட்டுள்ளது.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. சூர்யா நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். தீபாவளி வெளியீடாக அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஜெய் பீம்’ படத்தின் டிரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1990-களில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் தா.செ.ஞானவேல்.

செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற பழங்குடி ஜோடி , ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலிலிருந்து காணாமல் போகும்போது அவர்களின் உலகம் சிதறுகிறது. செங்கேனி தனது கணவனைத் தேடும் முயற்சியில் வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். பழங்குடிப் பெண்ணுக்கு நீதியை வழங்குவதற்காகச் சத்தியத்தை வெளிக்கொணரும் சட்டப் போராட்டம் அதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் இவற்றைச் சமாளித்தாரா என்பது தான் ‘ஜெய் பீம்’ படத்தின் கதையாகும்.

ADVERTISEMENT

இதில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

**-இராமானுஜம்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share