ரகிட ரகிட ரகிட…ஜகமே தந்திரம் அப்டேட்!

Published On:

| By Balaji

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல் வெளிவர உள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பேட்ட படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியிட தயாராகவுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், ஜகமே தந்திரம் படத்தை வெளியிட முடியாத சூழலில் படக்குழு உள்ளது.

‘ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று காலை 9 மணிக்கு ஜகமே தந்திரம் குறித்த ஆச்சரியமான அறிவிப்பு வெளியாக இருப்பதாக நேற்று(ஜூன் 30) தெரிவித்தது. படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளிவரலாம் என்ற தகவலால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், அறிவித்தபடியே படத்தின் தயாரிப்பாளரிடம் இருந்து அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், **தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் ஜூலை 28ம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல் ரகிட..ரகிட..ரகிட..” வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.** #DhanushBdayMonthBegins என்ற ஒரு ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். **அத்துடன் தனுஷ் புதிய தோற்றத்தில் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளிவந்துள்ளது.** அதை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

**-முகேஷ் சுப்ரமணியம்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share