குடியரசு துணைத் தலைவரானார் ஜெகதீப் தங்கர்

அரசியல்

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த குடியரசு துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று  ( ஆகஸ்ட் 6 ) நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.9 சதவீத வாக்குகள் பதிவாகின.

மொத்தம் பதிவான 725 வாக்குகளில் 528 வாக்குகள் பெற்று ஜெகதீப் தங்கர் வெற்றிபெற்றார். ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியாவின் 14 வது துணை குடியரசுத்தலைவராக பெறுப்பேற்க உள்ளார் ஜெகதீப் தங்கர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கலைஞர் நினைவு தினம்: முதல்வர் தலைமையில் பேரணி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.