ஒருவழியா ஓபிஎஸ் ஆன்லைனுக்கு வந்துட்டார். திடீர் திடீர்ன்னு உருளுதாம் உடையுதாம் ” வகையறா போல நல்லா போய்கிட்டிருந்த ஒபிஎஸ்,நத்தத்தின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிடுமோங்கிற வகையில் அவங்க ஆதரவாளர்கள் குறிவைத்து தமிழகம் முழுவதும் நீக்கப்பட எல்லோரும் ஆச்சரியமா பாக்க ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் மீது விசாரணை என தொடங்கிய பேச்சு, ‘வாழும் கட்டப்பா’ ஓபிஎஸ் தோட்டம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார் என செய்திகள் கிளம்பியது. திமுக தலைவர் கலைஞரே ஓபிஎஸ் எங்கே என ட்விட் போட்டு லேசான சூட்டிலிருந்த பிரச்சினையை ஹை ஃப்ளேமில் வைத்தார். சும்மாவே @ops4cmன்னு டிவிட்டரில் டேக் போட்டு அடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு லட்டு போல சிக்கினார் ஓபிஎஸ். ஒரே மீம்ஸ் மழைதான்.
//சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe
சும்மா தொங்கிட்டு இருக்குற பல்ப்பலாம் அம்மா ஒடைக்காது பொய்யாத்தான் இருக்கும் #OPS//
//Manoharan Karthik @kar2000k
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை ஆ#ஜெயா!
வீட்டுக் காவலில் ஒபிஎஸ்!//
//sulthan ibrahim @sulthanib102 Mar 16
கட்சிப் பொருளாளர் பதவியில் இருந்து, ஒ.பி.எஸ் அவர்களை நீக்க ” ஜெயில் லலிதாவுக்கு ” அதிகாரம்.. இருக்கா..? அல்லது நீக்கத்தான் முடியுமா?//
//@ZhaGoD
ஓபிஎஸ் நீக்கம்னு சொன்னாக்கூட நம்புவோம்; செங்கோட்டையன் புதிய பொருளாளர்ன்றானுக இதான் மெடிக்கல் மிராக்கிலா இருக்கு //
*********************************************************************************************************************************************
அதென்னவோ தெரியலை, விஜய்க்கு எப்படி மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கோ அதே அளவுக்கு அவர் பற்றிய செய்திகள் வெளியானால் அதை ட்ரோல் செய்வதற்கும் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கு. இதில் மட்டும் அஜித் ஃபேன்ஸ்,சிம்பு ஃபேன்ஸ் எல்லாம் வகைதொகையில்லாமல் ஒண்ணாயிடுவாங்க போல . தெறி பட பாடல்கள் இன்று வெளியானது. பாஸிடிவ் ட்ரெண்டிங்காக விஜய் ரசிகர்கள் பாடல்களை ஆகா! ஓகோ! எனப் புகழ்ந்து ட்விட் போட்டுக்கொண்டு இருந்தால், இது அந்த படத்துப்பாட்டு, இது இந்த படத்துப் பாட்டு என நெகட்டிவ் ட்ரோல் குரூப்களும் ட்விட்களும், மீம்ஸ்களுமாக சண்டேவா இருந்தாலும் பிஸியாக இருக்கின்றனர். அதில் ஒரு விஜய்ணா ஃபேன் தெறி படத்தின் ‘என் ஜீவன்’ பாட்டு சூப்பர், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு ட்விட் போட, “ஆமாமா, உனக்கு மட்டுமில்லை உங்க அப்பாவுக்கும் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ஏன்னா அது “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் இளையராஜா போட்ட ஒரே நாள் உனை நான் ட்யூன்’ன்னு ரிப்ளை ட்விட் போட்டாங்க விஜய் ஹேட்டர்ஸ்.
//@naaraju
நம்ம பசங்க பொதுவா ஆல்பத்துக்கெல்லாம் இவ்ளோ எகிற மாட்டாய்ங்களே…..அவ்ளோ மொக்கையாவாக்கீது!! #தெறி//
// @_kaali_
புலி ஆல்பத்த எப்படி நல்லாருக்குனு சொல்ல வைக்கிறது
விஜய்ணா : தெறி ஆல்பத்த கேட்டுட்டு அவுங்களே சொல்லுவாங்க //
// @mokkasaami 24m24 minutes ago
புலி கருமாந்திரத்துக்கு இது தேவலை #தெறி//
// @jeniferak2
விஜய்க்கு 50 ஆவது படம் “சுறா” அமைஞ்சது போல ஜீ.வி.-க்கு 50 ஆவது படம் “தெறி” அமைஞ்சிருக்கு.. …
#தஸ்ஸால் //
// @thoatta
இப்படி பாட்டு வாங்கி நம்ம பொழப்ப கவுத்திடுவாங்கன்னு தான், வெவரமா GVP ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ன்னு முன்னெச்சரிக்கையா சொல்லிட்டாரு போல //,”
