“மத்திய அரசு வேலை வேணும்… அதுவும் நல்ல சம்பளத்தோட வேணும்” என்று நினைப்பவர்களுக்கு, இந்தியத் தொலைபேசித் தொழில்கள் நிறுவனம் (ITI Limited) ஒரு தரமான வாய்ப்பை வழங்கியுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில், ‘இளம் நிபுணர்கள்’ (Young Professionals) பணிக்கான பிரம்மாண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தக் காலியிடங்கள்:
பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 215 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
- இளம் நிபுணர் – பட்டதாரி (Graduate): 43 இடங்கள்.
- இளம் நிபுணர் – தொழில்நுட்பவியலாளர் (Technician): 62 இடங்கள்.
- இளம் நிபுணர் – ஆபரேட்டர் (Operator): 71 இடங்கள்.
- மற்ற பிரிவுகள் (HR, Finance, Marketing, etc.): 39 இடங்கள்.
யாருக்கு எவ்வளவு சம்பளம்?
பதவிக்கு ஏற்றவாறு கைநிறைய சம்பளம் காத்திருக்கிறது!
- பட்டதாரிகளுக்கு (Graduate YP): மாதம் ரூ.60,000/-.
- டிப்ளமோ முடித்தவர்களுக்கு (Technician YP): மாதம் ரூ.35,000/-.
- ஐடிஐ முடித்தவர்களுக்கு (Operator YP): மாதம் ரூ.30,000/-.
கல்வித் தகுதி என்ன?
- Graduate YP: பி.இ/பி.டெக் (B.E/B.Tech), எம்.சி.ஏ (MCA), எம்.எஸ்சி (M.Sc) அல்லது எம்.பி.ஏ (MBA) முடித்திருக்க வேண்டும்.
- Technician YP: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (Diploma), பி.எஸ்சி (B.Sc) அல்லது பி.சி.ஏ (BCA) முடித்திருக்க வேண்டும்.
- Operator YP: பத்தாம் வகுப்புடன் ஐடிஐ (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் (ஜனவரி 12, 2026 அன்று).
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு கிடையாது!
- பட்டதாரிகளுக்கு மெரிட் பட்டியல் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, குழு விவாதம் (Group Discussion) மற்றும் நேர்காணல் (Interview) நடைபெறும்.
- மற்றவர்களுக்கு திறன் தேர்வு (Skill Test) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் itiltd.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: ஜனவரி 12, 2026.
வேலை தேடுற இளைஞர்களே… ஐடிஐ (ITI) முடிச்சவங்களுக்கு 30 ஆயிரம் சம்பளம்ங்கறது சாதாரண விஷயமில்ல. இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான (Contract Basis) வேலைதான் என்றாலும், மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவம் (Experience) உங்க கேரியருக்குப் பெரிய பிளஸ் பாயிண்ட்டா அமையும்.
எழுத்துத் தேர்வு இல்லாததால, இன்டர்வியூ அல்லது ஸ்கில் டெஸ்ட்ல தான் உங்க திறமையை நிரூபிக்கணும். கடைசித் தேதி நெருங்கிருச்சு, சர்வர் பிஸி ஆகுறதுக்கு முன்னாடி இப்பவே அப்ளை பண்ணிடுங்க!
