மோடியின் பயோபிக் மணிவண்ணன் எடுத்தால் நன்றாக இருக்கும் – சத்யராஜ் நச் கமெண்ட்!

Published On:

| By indhu

It would be great if Manivannan did a 'biopic' of Modi - actor Sathyaraj

மறைந்த நடிகர் மணிவண்ணன் போன்ற ஒரு இயக்குநர் மோடி பயோபிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என நடிகர் சத்யராஜ் இன்று (மே 29) தெரிவித்துள்ளார்.

மழை பிடிக்காத மனிதன்:

ரோமியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி நடிக்கும் புதிய படம் “மழை பிடிக்காத மனிதன்”.

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசர் இன்று (மே 29) வெளியாகி உள்ளது.

சத்யராஜ் பேச்சு:

இந்த டீசர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் நடிகர் சத்யராஜிடம், “45 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறீர்கள். உங்களிடம் 3 கேள்விகள் கேட்கவேண்டும்.

1.ரஜினி சாருடன் படத்தில் நடிக்கிறீர்களா?

2.இந்தியில் சல்மான் கானுக்கு வில்லனாக நடிக்கிறீர்களா?

3. முக்கியமாக இன்று கருப்பு சட்டை அணிந்துள்ளீர்கள், ஆனால், நீங்கள் காவி சட்டைக்காரராக நடிக்க உள்ளதாக இந்தியா முழுவதும் தகவல் வெளியாகிறது உண்மையா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சத்யராஜ், “இப்போது சினிமாவில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள்தான் படம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். நடிகராக நாம் அதை வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் உள்ளது.

ரஜினி சாருடன் கூலி திரைப்படத்தில் நடிக்கிறேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், பட நிர்வாகம் இதனை முன்னதாகவே தெரிவித்துள்ளது.

மீதமுள்ள கேள்விகளுக்கு அந்தந்த படக்குழுவினர்தான் பதிலளிக்க வேண்டும். நான் எதையும் முந்திக்கொண்டு சொல்ல முடியாது. ஏனெனில், அக்ரிமெண்ட் உள்ளது. நாம் எதையாவது சொன்னால், நம்மீது தேவையில்லாமல் ஏதாவது கேஸ் போட்டு விடுவார்கள்.

பிரதமர் மோடி குறித்த படம் பற்றி என்னிடம் யாரும் இதுவரை கேட்கவில்லை. அப்படியே கேட்டாலும் அதற்கு சற்று யோசிக்க வேண்டும்.

மோடியின் பயோப்பிக்கை எனது நண்பன் மறைந்த மணிவண்ணன் மாதிரியான ஒரு இயக்குனர் எடுத்தால் அப்படியே எடுக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால், விஜய் மில்டன் சார் அப்படியே எடுக்கிறேன் என்றால் கூட எனக்கு ஒகே தான்.

வெற்றி மாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இயக்கினால் மோடியின் பயோபிக் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

All Eyes On Rafah: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரண்ட பிரபலங்கள்!

கோவை: மருத்துவமனையில் திருட முயன்றதாக இளைஞர் அடித்துக் கொலை… 15 பேர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share