மின்சார வாரியத்தில் ஐடி ரெய்டா? நடந்தது என்ன?

Published On:

| By Kavi

IT raid on tamilnadu Electricity Board

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 25) காலை முதல் விசாரணை மேற்கொண்டனர். IT raid on tamilnadu Electricity Board

டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வந்தநிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டுதான் நடத்துகின்றனர் என்ற தகவலும் பரவியது. 

குறிப்பாக மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு உருவாகியிருக்கும் நிலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  இன்று (பிப்ரவரி 25) தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்துக்குறிப்பில்,  “ தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். ஆகவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது” என்று கூறப்பட்டுள்ளது.  IT raid on tamilnadu Electricity Board

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share