அன்புச்செழியன் : 4ஆவது நாளாக சென்னையில் தொடரும் ரெய்டு!

சினிமா

திரைப்பட தயாரிப்பாளர் அன்புசெழியன் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக மதுரை மற்றும் சென்னையில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை இன்று (ஆகஸ்ட் 5) மதுரையில் முடிவடைந்தது.

ஐடி ரெய்டு

ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

திரைப்பட தயாரிப்பாளரும், பைனான்சியரான அன்புசெழியன் வீடு, அலுவலகங்கள் என மதுரை மற்றும் சென்னையில் அவருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி மதுரையில் நடந்த சோதனை நிறைவடைந்தது.

சிக்கிய ஆவணங்கள்

பிகில் படத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் நடைபெற்ற சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில் நடந்து வந்த சோதனை நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் 4 ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மோனிஷா

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு: அமலாக்கத் துறைக்கு அனுமதி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.