இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே ஹெல்மெட்டுக்கு உள்ளே வைத்து மொபைலில் பேசுவது, மொபைலை காதில் வைத்து, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து அழுத்திப் பிடித்தபடி பேசுவது போன்ற செயல்களை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா?
“இது தவறு. இதனால் வெளிப்புற காதுகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். எனவே, நீண்ட நேரம் இப்படிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்கள் காது – மூக்கு – தொண்டை சிறப்பு மருத்துவர்கள்.
மேலும், “நாம் பேசுவதற்காக வெளிப்புற சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாக சத்தத்தின் அளவை அதிகரிப்போம். எப்போதாவது இப்படிப் பேசுவதில் கேட்பதில் தவறில்லை. ஆனால், இதே செயல் தொடர்ந்து நடைபெறும்போது காதுகள் பாதிக்கப்படத் தொடங்கும்.
ஆரம்ப கட்டத்தில் அதிக ஒலியில் பயன்படுத்தும்போது மன அழுத்தம், எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு ரத்த அழுத்தம்கூட இதனால் அதிகரிக்கும்.
நாளடைவில் காதில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கேட்கும் திறன் குறையத் தொடங்கும். நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறன் பாதிக்கப்பட்டு விட்டது என்றால் அதை மீட்டெடுக்க முடியாது” என்று எச்சரிக்கிறார்கள்.
இதைத் தவிர்க்க… “பயன்படுத்தும் ஹெட்போன்களும் தரமானவையாக, மிருதுவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் காதுகளில் தொடர்ந்து பயன்படுத்தும்போது வலியை ஏற்படுத்தும்.
இன்னும் சிலர் மொபைல், ஹெட்போனில் பேசுவதற்கு பதில் ஒலிபெருக்கியைப் (Speaker) பயன்படுத்திப் பேசுவார்கள்.
அப்படிப் பயன்படுத்திப் பேசும்போது குறைவான ஒலியில் வைத்துப் பேச வேண்டும். அதையும் அதிக சத்தத்தில் வைத்துப் பயன்படுத்தினால் காதுகள் பாதிக்கப்படவே செய்யும்.
காதுகள் பாதிப்பைத் தவிர்ப்பதற்கு மொபைல், ஹெட்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பதைவிட, எவ்வளவு சத்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
எப்போதுமே மொபைலை மிதமான ஒலியில் வைத்துப் பயன்படுத்துவதே நல்லது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆடியவே தள்ளுபடி பண்ணியாச்சி : அப்டேட் குமாரு
மாப்பிள்ளை சபரீசன் பிறந்தநாள்: திரண்ட அமைச்சர்கள்!
ஆம்ஸ்ட்ராங் கொலை : பெண் வழக்கறிஞர் உட்பட மேலும் இருவர் கைது!
