நிலாவில் உலா வரும் ரோவர்: இஸ்ரோ புதிய அப்டேட்!

Published On:

| By Monisha

isro release pragyan rover video

நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் ரோவரின் புதிய வீடியோவை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தூசிகள் அடங்கிய பிறகு லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 25) லேண்டரில் இருந்து ரோவர் கீழே இறங்கி செல்லும் வீடியோவை இஸ்ரோ பகிர்ந்திருந்தது. அதில் ரோவர் மெதுவாக லேண்டரில் இருந்து இறங்கி நிலவில் பயணத்தை தொடங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து இன்றும் ரோவர் செயல்பாடுகள் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளது இஸ்ரோ. ரோவர் மெதுவாக நகர்ந்து சென்று நிலவில் ஆய்வு செய்யும் வீடியோவை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. எக்ஸ் பக்கத்தில், “இங்கே புதிதாக என்ன இருக்கிறது? தென் துருவத்தில் சந்திர ரகசியங்களைத் தேடி அலையும் பிரக்யான் ரோவர்” என்று குறிப்பிட்டுள்ளது இஸ்ரோ.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மோனிஷா

பள்ளியில் மதவெறி… வீடியோவால் அதிர்ச்சி: உ.பி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

’234 தொகுதிகளிலும்… ஐடி விங்கிற்கு விஜய் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share