சந்திரனை தொடர்ந்து சூரியன்: இஸ்ரோவின் அடுத்த டார்கெட்!

Published On:

| By Monisha

isro ready to launch adithya L1

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் ஏவவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து நிலவில் தனது ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த சாதனையின் அடையாளமாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 26) அறிவித்திருந்தார்.

நிலவில் தடம் பதித்த இந்தியாவின் சாதனையை உலக நாடுகள் திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரோ அடுத்த டார்கெட்டிற்கு தயாராகிவிட்டது.

ADVERTISEMENT

வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியன் குறித்த ஆய்வுப் பணிக்காக “ஆதித்யா எல் 1 விண்கலத்தை பி.எஸ்.எல்.வி – C57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் சென்று இந்தியாவின் ஆதித்யா விண்கலம் ஆய்வு மேற்கொள்வதன் மூலம்,  சூரியனைப் பற்றியும் பிரபஞ்சத்தை பற்றியும் இதுவரை அறிந்திடாத பல தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ரேஞ்சே 1 சுற்றுப்பாதையில் ஆதித்யா 1 விண்கலம் நிலை நிறுத்தப்படுவதற்கு 120 நாட்கள் ஆகும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை செயலாளர் அதிரடி ஆய்வு!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share