இஸ்ரோவில் 100 அப்ரண்டிஸ் காலியிடங்கள்… நெல்லையில் நேரடி இன்டர்வியூ! டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

isro iprc apprentice recruitment 2026 walk in interview nellai

“இஸ்ரோ (ISRO) மாதிரி ஒரு பெரிய நிறுவனத்துல பயிற்சி கிடைச்சா லைஃப் செட்டில் ஆகிடுமே!” என்று நினைக்கும் தென் தமிழக இளைஞர்களுக்கு, ஒரு பொன்னான வாய்ப்பு தேடி வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் (ISRO Propulsion Complex – IPRC), 2025-26 ஆம் ஆண்டிற்கான தொழிற்பழகுநர் (Apprentice) பயிற்சிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 100 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

காலியிடங்கள் விவரம்:

பல்வேறு பிரிவுகளில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது:

ADVERTISEMENT
  • பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentice – Engineering): மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பட்டதாரி அப்ரண்டிஸ் (Non-Engineering): பி.ஏ (B.A), பி.எஸ்சி (B.Sc), பி.காம் (B.Com) முடித்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் வாய்ப்பு உண்டு.
  • டெக்னீசியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice): சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (Diploma) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி & ஆண்டு:

  • 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ள முடியும்.
  • அப்ரண்டிஸ் விதிகளின்படி குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும் (பொதுவாக 28 முதல் 35 வயது வரை, இட ஒதுக்கீடு பிரிவினருக்குத் தளர்வு உண்டு).

உதவித்தொகை (Stipend):

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

  • பட்டதாரி அப்ரண்டிஸ்: ரூ.9,000/- மாதம்.
  • டெக்னீசியன் அப்ரண்டிஸ்: ரூ.8,000/- மாதம்.

இன்டர்வியூ எப்போது? எங்கே?

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பத் தேவையில்லை. நேரடியாகச் சான்றிதழ்களுடன் சென்று நேர்காணலில் (Walk-in Interview) கலந்துகொள்ளலாம்.

தேதி: ஜனவரி 10, 2026 (சனிக்கிழமை): பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவுகள்).

ஜனவரி 11, 2026 (ஞாயிற்றுக்கிழமை): டெக்னீசியன் அப்ரண்டிஸ் (டிப்ளமோ பிரிவுகள்).

  • நேரம்: காலை 9.00 மணி முதல்.
  • இடம்: ISRO Propulsion Complex (IPRC), மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம்.

தம்பிங்களா… இஸ்ரோல அப்ரண்டிஸ் முடிச்சா, பிற்காலத்துல அங்கேயே நிரந்தர வேலை கிடைக்குறப்போ முன்னுரிமை கிடைக்க வாய்ப்பிருக்கு. இது சும்மா டிரெய்னிங் தானேன்னு அலட்சியமா இருக்காதீங்க.

நேர்ல போகும்போது பயோடேட்டா (Bio-data), ஒரிஜினல் சர்டிபிகேட், ஆதார் கார்டு, போட்டோ எல்லாம் மறக்காம எடுத்துட்டுப் போங்க. குறிப்பா, www.iprc.gov.in இணையதளத்துல அப்ளிகேஷன் ஃபார்ம் இருக்கும், அதை டவுன்லோட் பண்ணிப் பூர்த்தி செஞ்சு எடுத்துட்டுப் போறது நல்லது. நெல்லை, குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவங்களுக்கு இது ஒரு சூப்பர் சான்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share