விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி – சி 61… ஆனால் : இஸ்ரோ அப்டேட்!

Published On:

| By Kavi

PSLV C-61 Mission Fails

பி.எஸ்.எல்.வி சி-61 செயற்கைக்கோள் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ கூறியுள்ளது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து இன்று (மே 18) காலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 

பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1,696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக்கோள் இதில் பொருத்தப்பட்டிருந்தது. 

இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். அனைத்து காலநிலைகளையும் துல்லியமாக படம் எடுக்கும் திறன் கொண்டது. 

விவசாயம், கடல் வளம், வெள்ளம் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பிற்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். 

இந்த செயற்கைக்கோள் இன்று ஏவப்பட்ட நிலையில், ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் திட்டம் தோல்வி அடைந்தது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. PSLV C-61 Mission Fails

இது இஸ்ரோ ஏவிய 101 வது செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share