இஸ்ரேலின் Operation Rising Lion: ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது சரமாரி தாக்குதல்! ஏவுகணைகளால் பதிலடி- என்ன நடக்கிறது?

Published On:

| By Mathi

Israel's Operation Rising Lion

ஈரான் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து அவற்றைத் தாக்கி அழிக்கும் இஸ்ரேலின் Operation Rising Lion நடவடிக்கையால் மத்திய கிழக்கில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. Israel’s Operation Rising Lion

பாலஸ்தீனர்களின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர யுத்தம் நீடிக்கும் நிலையில் தற்போது ஈரான் மீது Operation Rising Lion நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது

ADVERTISEMENT
  • ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பல இடங்களில் குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்கின்றன.
  • ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களில் முக்கியமான ஃபோர்டோ நிலையம், இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது.
  • ஈரானின் மற்றொரு அணுசக்தி நிலையமான நடான்ஸ், இஸ்ரேல் தாக்குதலால் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேல் தாக்குதலில் அணுசக்தி நிலையங்களில் இருந்து கசிவுகள் ஏற்படுவதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்கி வருகிறது. டெல் அவிவ் நகரின் Ichilov மருத்துவமனை மீதான ஈரான் தாக்குதலில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்; ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.
  • ஈரானின் பல நூறு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
  • அமெரிக்கர்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தக் கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது
  • ஈரான் மீதான இந்த தாக்குதல் ஒரு தொடக்கம்தான்.. இனிமேல் முழுவீச்சில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • ஈரானின் இடைவிடாத ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சைரன்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
  • இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை மேலும் தீவிரமடையும் என ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.
  • இஸ்ரேலும் ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
  • ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையம், இஸ்ரேல் தாக்குதலால் தீ பிடித்து எரிகிறது.
  • இஸ்ரேல் மீது ஈரான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அவரசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 6 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
  • இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ கமாண்டர் ஹொசைன் சலாமி உயிரிழந்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காதான் இருக்கிறது என்பது ஈரானின் குற்றச்சாட்டு. இதனை மறுக்கிறார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share