அன்புதானே எல்லாம்… இப்படியே இருந்துட்டா இந்த உலகமே நல்லாருக்குமே!

Published On:

| By Kumaresan M

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி எதிர்பாராத தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்..israeli hostage kisses Hamas soldiers

இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 48,319 பேர் உயிரிழந்தனர். காசா நகரம் முற்றிலும் சிதிலமடைந்து போனது. இதையடுத்து, ஐ.நா. மற்றும் பிற நாடுகள் எடுத்த முயற்சி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் அரசும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டன. israeli hostage kisses Hamas soldiers

ADVERTISEMENT

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் அரசு பாலஸ்தீன கைதிகளையும், ஹமாஸ் பயங்கரவாதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். israeli hostage kisses Hamas soldiers

அதன்படி, நேற்று ஹமாஸ் படையினர் ஆறு இஸ்ரேலியர்களை விடுவித்தனர். விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக மேடையில் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களிடத்தில் விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

தொடர்ந்து, அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் உற்சாகமாக கையை அசைத்து விடை பெற்றனர். தங்களை பிடித்த ஹமாஸ் போராளிகளுடனும் விடுவிக்கப்பட்டவர்கள் பேசினர். .sraeli hostage kisses Hamas soldiers

அப்போது, ஓமர் ஷென் டாவ் என்ற இஸ்ரேலிய இளைஞர் ஹமாஸ் போராளிகள் இருவரின் நெற்றியில் முத்தம் கொடுத்து விடை பெற்றார். இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் ரெட் கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு, இஸ்ரேல் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் சேர்ந்தனர். இது குறித்து ஓமரின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகன் மிகுந்த நேர்மறை சிந்தனை கொண்டவர். இதன் காரணமாகவே ஹமாஸ் அமைப்பினர் மீதும் அவருக்கு அன்பு செலுத்த மனம் இருக்கிறது” என்கின்றனர். israeli hostage kisses Hamas soldiers

விடுவிக்கப்பட்ட ஓமர் ஷென் டாவ் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் 555 நாட்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share