ஈரானை கதறவிட்ட கையோடு மோடிக்கு போனை போட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

Published On:

| By Mathi

Modi Israel

ஈரான் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். Israel PM Netanyahu speaks to PM Modi on situation in region

ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து Operation Rising Lion ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் Operation True Promise தாக்குதல் நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொடர்பு கொண்டு, மத்திய கிழக்கு போர் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசியது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில்,“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் @netanyahu இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மாறிவரும் சூழ்நிலை குறித்து அவர் எனக்கு விளக்கினார். இந்தியாவின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டேன், மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பேசினார். இந்த கலந்துரையாடலின் போது, ​​சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மோடியிடம் நெதன்யாகு விளக்கினார், அதே நேரத்தில் நிலைமை குறித்த இந்தியாவின் கவலைகளை இந்தியப் பிரதமர் வெளிப்படுத்தினார். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான அவசரத் தேவையை மோடி வலியுறுத்தினார், இது உலகளாவிய அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share