இஸ்ரேல்- ஈரான் இடையேயான யுத்தத்தால், மத்திய கிழக்கு நாடுகள் வான்வெளியை மூடுவதாக அறிவித்தன. இதனால் சென்னையில் இருந்து குவைத், துபாய், தோஹாவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. Israel-Iran Flights Chennai
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்காவும் கை கோர்த்தது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து கத்தார் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்பரப்பை மூடுவதாக அறிவித்தன. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்கா விமானப் படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி அதிரவைத்தது.
தற்போது இஸ்ரேல்- ஈரான் இருநாடுகளும் போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனிடையே கத்தார் உள்ளிட்ட நாடுகள் வான்பரப்பை மூடியதால் சென்னை விமான நிலையத்தில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோஹா,அபுதாபி, குவைத், துபாய் செல்லக் கூடிய 6 விமான சேவைகளும் அங்கிருந்து சென்னை வரும் 5 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாய்லாந்தில் இருந்து தோஹா சென்ற 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் சென்னையில் தரை இறங்கின.