காஸாவின் பலி எண்ணிக்கை 30,035 ஆக உயர்வு!

Published On:

| By christopher

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காஸாவில் பலியாகிய பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30,035 ஆக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதுவரை 30,035 பேர் உயிரிழந்ததாகவும் 70,457 காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸின் ஆளுகையில் உள்ள காஸா சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள், முந்தைய போர்களில் சர்வதேச அமைப்புகளால் உறுதிசெய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கையில் போராளிகள், பொதுமக்கள் எத்தனை பேர் என்கிற விவரங்களை அமைச்சகம் குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1200-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பலியாகினர்.  அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்துவரும் வான்வழி மற்றும் தரைவழி ராணுவ நடவடிக்கைகள் ஐந்து மாத காலமாக தொடர்ந்து வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

ராஜ்

வீல்சேர் வழங்காததால் உயிரிழந்த முதியவர் : ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணிராதீங்க!

கிச்சன் கீர்த்தனா : முருங்கைக்காய் முந்திரி பொரியல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share