காசாவின் ரஃபா நகரில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக் குழுவினரை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.
மேலும், காசா முனையின் நஸ்ரத் அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பணய கைதிகளையும் சமீபத்தில் இஸ்ரேல் அதிரடியாக மீட்டது. மேலும், 116 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கையிலும் காசா முனை மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், மேற்கு கரையில் ஏற்பட்ட மோதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் படையினரும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், காசா முனையின் ரஃபாவில் 50 சதவிகித ஹமாஸ்ஆயுதக் குழுவினரை வீழ்த்திவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஃபா நகரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நான்கு பிரிவுகளாக செயல்பட்டு வருவதாகவும், இதில் இரண்டு பிரிவுகள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், எஞ்சிய இரண்டு ஹமாஸ் பிரிவுகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ரஃபாவில் பணியை முடிக்க மேலும் சில வாரங்கள் எடுக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பியூட்டி டிப்ஸ்: பிரபலங்களின் சருமப் பளபளப்பை நீங்களும் பெற…
ஹெல்த் டிப்ஸ்: நாய்க்கடி.. உடனடியாக செய்ய வேண்டியது இதைத்தான்!
கிச்சன் கீர்த்தனா : கேரட் சப்ஜா ஜூஸ்
ஒரே மாசம் வெயிலுக்கும் லீவு… மழைக்கும் லீவு… : அப்டேட் குமாரு
பெசன்ட் நகர் – விபத்தில் இளைஞர் பலி : எம்.பி. மகளுக்கு ஜாமின்!