மஹா சிவராத்திரியில் இலவசமாகப் பங்கேற்கலாம்: ஈஷா

By Kavi

|

Published on 10 Feb 2023, 6:36 PM

கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

‘தென் கயிலாயம்’ என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இங்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6மணி முதல் மறுநாள் காலை 6மணி வரை ஆதியோகி சிலை முன்பு நடைபெற உள்ளது.

இவ்விழாவில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈஷா யோக மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள் ‘தாமிரபரணி’ என்ற பிரிவை தேர்வு செய்து பெயர், அலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த முன்பதிவு நடைபெறும்.

முன்பதிவு செய்த பிறகு, விழாவில் பங்கேற்பதற்கான இ-பாஸ் பதிவு செய்தவர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ADVERTISEMENT

பிப்ரவரி 18ஆம் தேதி ஈஷாவிற்கு வரும் போது, மலைவாசல் அருகே இருக்கும் நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் இந்த இ-பாஸை காண்பித்து நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்.

இவ்விழா மாலை 6மணிக்கு தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும்.

லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய நடைபெறும்.

விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்றைய தினம் இரவு மஹா அன்னதானம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் துணிகரம் – 9 கிலோ நகை கொள்ளை: தனிப்படை விசாரணை!

அன்று வாரிசு இன்று வாத்தி : ரெட் ஜெயண்ட்டை எதிர்த்து வெற்றி பெறுவாரா லலித்குமார்?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel