ADVERTISEMENT

20 பேர் கட்சியா விசிக? திருமாவளவனை விமர்சிப்பதா? நாவை அடக்கி பேசுக.. ஆதவ் அர்ஜூனாவுக்கு குவியும் கண்டனங்கள்

Published On:

| By Mathi

விடுதலை சிறுத்தைகள் கட்சியை 20 பேர் கொண்ட கட்சி என விமர்சித்த தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நேற்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, விசிகவை 20 பேர் கொண்ட கட்சி என விமர்சித்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

ADVERTISEMENT

இதனையடுத்து ஆதவ் அர்ஜூனா நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், திமுக சார்பு நபர்கள் 20 பேர் விசிகவில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசுகையில்தான் அப்படி தாம் சொல்லிவிட்டதாக கூறியிருந்தார்.

ஆனாலும் ஆதவ் அர்ஜூனாவின், ”20 பேர் கொண்ட கட்சி விசிக” என்ற விமர்சனத்துக்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ADVERTISEMENT

@sugunadiwakar: இந்தியாவிலேயே இன்னொரு கட்சிக்குச் செல்லும்போது ஒரே ஒரு ஆதரவாளரைக்கூட அழைத்துச் செல்ல முடியாத, வலிமையோ நம்பகத்தன்மையோ இல்லாத ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனை விமர்சிப்பதற்குத் தகுதியற்றவர்.

ADVERTISEMENT

@akilan16: ஆதவ் அர்ஜுனா போன்ற முகம் தெரியாத நபர்களை இந்த உலகிற்கு தெரிய படுத்திய
திருமாவளவனுக்கு இந்த துரோக பேச்சு புதிதல்ல!
அவர் இதையெல்லாம் கடந்து வந்த மாபெரும் மக்கள் தலைவர்! வடசென்னை படத்தில் வரும் “ராஜன்” எங்கள் அண்ணன் திருமா.. தம்மா தூண்டு Anchor தான் அவ்ளோ பெரிய கப்பலை நிறுத்தும் சனாதனத்தை தடுத்து நிறுத்தும் சிறுத்தை!

@munisvck11: தன்னை அறியும் மனமே விரியும்! வரும் தடைகள் விலக்கி சாதனை புரியும்!
@tcrsaravananmca:ஆதவ் 20 பேரா… கொஞ்சம் திரும்பிப் பார்… இது வெறும் டிரைலர்தான்…
#with_thiruma இன்றல்ல.. என்றென்றும்…

@munisvck11: ஆதவ் ~ விசிக கட்சில
20 பேர் தான் இருப்பாங்க..ஆதவ் அர்ஜூனா.. கண்ணு தெரியுமா உனக்கு நீயும் தானே இங்கு இருந்த.. இன்னுமா நீ திருந்தல போல..

@vckitwingoffi: ஆதவ் அர்ஜூனா நாக்கை அடக்கிப் பேசுவது நல்லது… எழுச்சித் தமிழர்
திருமாவளவன் அவர்களைக் குறித்து கண்ணியமற்ற விமர்சனத்தை வைத்திருக்கும் ஆதவ் அர்ஜூனா யார் ? விசிக வில் துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை தலைவைர்
கொடுக்காமல் போயிருந்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரிந்திருக்காது… இன்று அதே திருமாவளவனை கொச்சைப்படுத்துவது போல் பேசுவது அயோக்கியத்தனம்… நாவை அடக்கினால் நல்லது ஆதவ்..

@shanmugamchin10: கத்துக்குட்டி ஆதவ்…கத்துகிறது ஒரு ஆசானை பாத்து.. அரசியலிலும் பொது வாழ்விலும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எளிய மக்களிடையே நேரடி தொடர்பு கொண்டவர் தோழர் திருமா!! இன்று ஆதவ் பேச்சானது எளிய மக்கள் நடிகரின் பின்னால் தான் நிற்கிறார்கள் என்கிற மாய பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அவருக்கு முன்பு ஆதவ் வெறும் அட்டக்கத்தி தான்.. ஆனால் பேச்சு மட்டும்…

@holmes51069286: நீ கட்சியை விட்டு போகும் போது அந்த 20 பேர்ல ஒருத்தன் கூட உன்னோட வரல எண்ணிக்கை முக்கியம் இல்ல கொள்கையும் ஏற்றுக்கொண்ட தலைவரின் மீதான விசுவாசமும் தான் முக்கியம் அது உன்ன மாதிரி ஆட்களுக்கு தெரிய வாய்பில்லை.!

@Sivaa_Comrade: “விசிக தோழர் திருமா வும் நிர்வாகிகளும் இந்த மக்களுக்காக போராடி பல தியாகங்களை செய்தவர்கள் விசிக வை பற்றி தவறாக விமர்சித்தால் தமிழகத்தில் எங்கும் நடமாட முடியாது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜி.ஜி.சிவா கடும் எச்சரிக்கை.

@Vck_Socialmedia: நாவை அடக்கி வைத்துகொள்..!!
தற்குறி ஆதவ் அவர்களே திருமாவை சீண்டினால் தமிழகத்தில் எங்கும் பரப்புரை செய்ய முடியாது எச்சரிக்கை..!!

@senbalan: இவ்வளவு தெளிவாக வீடியோ ஆதாரம் இருக்கும் போதே இப்படி எழுதுறதுக்கு எவ்வளவு அதுப்பு வேண்டும்?

@Senthilvel79:ஆதவ் அர்ஜூனா நாக்கை அடக்கிப் பேசுவது நல்லது… எழுச்சித் தமிழர் @thirumaofficial

அவர்களைக் குறித்து கண்ணியமற்ற விமர்சனத்தை வைத்திருக்கும் ஆதவ் அர்ஜூனா யார் ? விசிக வில் துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை தோழர் திருமா அவர்கள் கொடுக்காமல் போயிருந்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரிந்திருக்காது… இன்று அதே தோழர் திருமாவைக் கொச்சைப்படுத்துவது போல் பேசுவது அயோக்கியத்தனம்… நாவை அடக்கினால் நல்லது ஆதவ்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share