சூர்யா படத்தில் வடிவேலு நடிப்பது உண்மையா?

Published On:

| By Balaji

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக, பாண்டிராஜ் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக டாக்டர் படத்தில் நடித்துவரும் ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சூரி, திவ்யபாரதி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ADVERTISEMENT

சமீபத்தில், சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதோடு, மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் வீட்டில் ஓய்வில் இருக்கிறார் சூர்யா. முழுமையாக தயாரானதும், பாண்டிராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

இந்நிலையில், சூர்யா படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார் எனும் தகவல் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இருவரும் இணைந்து நடிப்பது உறுதியானால், ஆதவன் படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா – வடிவேலு இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும். சொல்லப் போனால், 12 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி இணையும். அதுமட்டுமல்ல, ஃப்ரெண்ட்ஸ், வேல், ஆறு மற்றும் சில்லுனு ஒரு காதல் படங்களிலும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு படமுமே க்ளாசிக் ஹிட் தான்.

ADVERTISEMENT

நமக்கு கிடைத்திருக்கும் புதுத் தகவல் படி, சூர்யா 40 படத்தில் காமெடியனாக இப்போதைக்கு சூரி மட்டுமே ஒப்பந்தமாகியிருக்கிறார். வடிவேலு நடிப்பது உண்மையில்லை என்றே நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

வடிவேலுவை ரசிகர்கள் கடைசியாக விஜய்யுடன் நடித்த மெர்சல் படத்தில் பார்த்ததுதான். அதன்பிறகு, புதிதாக எந்தப் படமும் கமிட்டாகவில்லை. அதற்கு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி சர்ச்சை தீர்வுக்கு வராததே காரணம் என்கிறார்கள். சமீபத்தில் கூட, வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதுவும் என்னவானது என்பதும் தெரியவில்லை.

ADVERTISEMENT

**- தீரன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share