ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பா? தெற்கு ரயில்வே விளக்கம்!

By christopher

|

Published on 22 Feb 2025, 11:36 AM

is unreservation coach decreased?

எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. is unreservation coach decreased?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்தாக ரயில்வே இருந்து வருகிறது. குறைந்த கட்டணத்தில் விரைவாக பயணிக்கலாம் என்பதால் மக்கள் தங்கள் பயணத்திற்கு ரயில்களையே பெரிதும் விரும்புகிறார்கள். மேலும், ஏழை மக்கள் பெரும்பாலும் ரயில்களின் முன்பதிவில்லா பொதுப் பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 2ஆக இந்திய ரயில்வே குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

26 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை குறைத்து அதற்கு பதிலாக, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

ADVERTISEMENT

அதிகரிக்கத் தான் திட்டமிட்டுள்ளோம்! is unreservation coach decreased?

இந்த நிலையில் தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், “எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பொது பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை. எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயனடையும் வகையில் பிப்ரவரி மாதம் முதலே பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே சாா்பில் திட்டமிடப்பட்டு இருந்தது.

எனினும், மகா கும்பமேளா செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் அதற்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து, “மகா கும்பமேளா வரும் 26ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இதனால் வரும் மாா்ச் முதல் இந்த 2ம் வகுப்பு பொதுப் பெட்டிகள் தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

சென்னை – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், சென்னை – ஆலப்புழா அதிவிரைவு ரயில், சென்னை – மைசூரு அதிவிரைவு ரயில், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயில், கொச்சுவேலி விரைவு ரயில் ஆகிய 5 ரயில்களில் 2 ஆக உள்ள முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் – ஈரோடு வரையிலான ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை – ஐதராபாத் அதிவிரைவு ரயில், புதுச்சேரி – மங்களூரு விரைவு ரயில், நெல்லை – புருலியா விரைவு ரயில் உள்பட 8 ரயில்களில் 3 ஆக உள்ள பொதுப் பெட்டிகள் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிக்கப்பட உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

—

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel