ADVERTISEMENT

என்னது அதிமுக கூட்டணியில் டிரம்ப் கட்சி சேருதா? – கார்த்தி சிதம்பரம் கிண்டல்

Published On:

| By Minnambalam Desk

Karti Chidambaram Edappadi Palaniswami

அதிமுக கூட்டணியில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கட்சி சேர வாய்ப்பு இருக்கலாம் என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். Karti Chidambaram Trump Party

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ‘மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஜூலை 16-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பேசிய பழனிசாமி, அதிமுகவை பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.

அடுத்து பாருங்கள் ஒரு பெரிய கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பிரம்மாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று பேசினார்.

ADVERTISEMENT

அரசியல் வட்டாரத்தில் எது அந்த பிரம்மாண்டமான கட்சி என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு போகமாட்டோம் என தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், “அது ரிபப்ளிக் பாட்டியாக இருக்கலாம். டொனால்ட் டிரம்ப் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கலாம்.

ADVERTISEMENT

அமெரிக்காவைப் பற்றி எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பேசுகிறார். அதனால் அமெரிக்கா ரிபப்ளிக் பார்ட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கலாம்” என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share