புரோ கபடி தொடர் கிட்டத்தட்ட முடிவடைய போகிறது. இதையடுத்து காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி எங்கே நடைபெறுகிறது? என்பது குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி அனைத்து போட்டிகளும் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆப் செல்லுமா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை தற்போது கிடைத்து விட்டது.
அதன்படி தலைவாஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு தற்போது நிராசையாகி விட்டது. நேற்று (பிப்ரவரி4)குஜராத் அணியுடனான தோல்விக்கு பின்னர் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் தற்போது பறிபோயுள்ளது.
தொடர்ந்து 3 ஹாட்ரிக் வெற்றிகளை சமீபத்தில் தலைவாஸ் அணி பெற்றது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறி இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி ஜெய்ப்பூர் அணி மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. புனேரி பல்தான், தபாங் டெல்லி இரு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பினை உறுதி செய்து விட்டன.
மீதமுள்ள 3 இடங்களுக்கு தற்போது குஜராத், ஹரியானா, பாட்னா, பெங்களூர், பெங்கால் அணிகள் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது.
இதில் எந்த 3 அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேறி, பிளே ஆஃப் செல்லும் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலையில் உணவகம்: சேகர்பாபு அறிவிப்பு!
”அவரே பாராட்டிட்டாரு” மகிழ்ச்சியில் திளைக்கும் ‘லவ்வர்’ மணிகண்டன்