பாஜக ஆளும் மாநிலங்களில்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கம்பு சுழற்ற வேண்டும்.. தமிழ்நாட்டில் அல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1044 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.362.77 கோடி மதிப்பில் 1073 முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக நானோ, நீங்களோ மட்டும் கூறவில்லை. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மேடைகளில் புலம்பி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார் ஆளுநர் ரவி. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஆவணங்களைப் பார்த்து, பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இப்படி எல்லாம் ஆளுநர் கம்பு சுழற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராக பேசி வரும் ஆளுநரை வைத்துக் கொண்டு பாஜக இழிவான அரசியல் செய்து வருகிறது என்றார்.
