ஹெல்த் டிப்ஸ்: திடீர் காய்ச்சல்… உடனடி தீர்வு உண்டா?

Published On:

| By christopher

Is there an immediate solution to sudden fever?

சிலருக்கு திடீரென காரணமே இல்லாமல் காய்ச்சல் வரும். அடுத்தடுத்த நாட்களில் ஏதோ முக்கிய வேலைகள் இருக்கும் பட்சத்தில் காய்ச்சல் அந்த வேலைகளுக்குத் தடையாக இருக்கிறது. இத்தகைய சூழலில் காய்ச்சல் வந்தால் அதை உடனே சரியாக்க ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்கள் என்று தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்களிடம் கேட்டோம்.

“முதலில் காய்ச்சல் ஏன் வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி காய்ச்சல் வந்தால் அது உடனடியாக சரியாகிவிட வேண்டுமா என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

நம் உடலில், மூளையில் ஹைப்போதலாமஸ் என்றோர் உறுப்பு இருக்கிறது. இது நம் உடலின் வெப்பநிலையை குறுகிய ரேஞ்சுக்குள் வைக்கச் செய்யும். அதனால்தான் நம்மால் உயிருடன் இருக்க முடிகிறது.

சில நேரங்களில் இந்த ரேஞ்ச் ரீசெட் ஆகும். அதை `தெர்மோஸ்டாட் ரீசெட்டிங்’ (thermostat resetting) என்று சொல்வோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். குளிரெடுக்கும்.

நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யவே, இப்படி உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. அதைத்தான் நாம் காய்ச்சல் என்பதாக உணர்கிறோம்.

காய்ச்சல் வருகிறது என்றால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சில வகை காய்ச்சல் ஒரே நாளில் சரியாகிவிடும். அதுவே டைபாய்டு போன்ற காய்ச்சல் என்றால், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுக்க ஆரம்பித்த பிறகும் ஐந்து நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். வைரஸ் காய்ச்சல் மூன்று – நான்கு நாள்கள் வரை தொடரலாம். அதையெல்லாம் உடனடியாக சரி செய்வதெல்லாம் சாத்தியமே இல்லை.

டெம்பரேச்சரை குறைக்க பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் வந்துவிட்டதை நினைத்து பயப்படத் தேவையில்லை. வெறும் காய்ச்சலால் யாருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. காய்ச்சலுக்கு காரணமான விஷயத்தால்தான் பிரச்சினை வரும். அதைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது” என்று விளக்கமளித்தார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: அழகாக இருக்க அன்றாட ஆலோசனைகள் சில…

அதானி தாக்கப்பட்டது ஏன்?

டாப் 10 நியூஸ் : காஷ்மீரில் மோடி பேரணி முதல் கங்குவா அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா : குழம்பு வடகம்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share