பியூட்டி டிப்ஸ்:  நடிகைகளின் ‘ஆன்டி- இன்ஃப்ளமேட்டரி டயட்’… எல்லோருக்கும் ஏற்றதா?

Published On:

| By Selvam

நடிகை சமந்தா, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோர் தங்களது எடைக்குறைப்பின் ரகசியமாக  ஆன்டி- இன்ஃப்ளமேட்டரி டயட் பற்றி சொன்ன பிறகு இது பலராலும் பேசப்படும் உணவு முறையாக மாறியுள்ளது.

‘ஆன்டி- இன்ஃப்ளமேட்டரி டயட்’ என்பது என்ன? எல்லாருக்கும் ஏற்றதா? உணவியல் ஆலோசகர்களின் பதில் என்ன?

ADVERTISEMENT

‘‘உடலில் விரும்பத்தகாத விளைவான அழற்சியை ஏற்படுத்தும் உணவைத் தவிர்க்கும் உணவுப்பழக்கத்தையே ‘ஆன்டி- இன்ஃப்ளமேட்டரி டயட்’  என்கிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ், விதைகள், மீன் உணவுகளில் கிடைப்பது போன்ற  கொழுப்பு குறைவான, புரதம் நிறைந்த லீன் புரோட்டீன் (Lean protein) போன்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் இந்த டயட்டில் அடங்கியிருக்கும்.

ADVERTISEMENT

முக்கியமாக மீன்கள், ஆளி விதைகள், வால்நட் போன்றவற்றில் செறிந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு ஆன்டி- இன்ஃப்ளமேட்டரி டயட்  பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்கிறது.

மேலும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பழங்கள், காய்கறிகளும் இதில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

ADVERTISEMENT

இந்த உணவுகளுடன் நம் பாரம்பர்ய உணவுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும்  லவங்கப்பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சி, மஞ்சளும் இதில் உண்டு. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே என்ன சாப்பிடக்கூடாது என்பதிலும் இதில் விதிமுறைகள் உண்டு.

உடலில் அழற்சியினைத் தூண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, ட்ரான்ஸ்ஃபேட் என்கிற கெட்ட கொழுப்பு போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி சீராகப் பராமரிக்கப்படும். நாள்பட்ட ஆர்த்ரைட்டிஸ், இதய நோய்கள், சில புற்றுநோய்களும் இதனால் தடுக்கப்படும்.

நடிகை சமந்தா, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரின் உணவு முறையாக மாறியுள்ள இது, எடைக்குறைப்புக்காகப் பரிந்துரைக்கப்படும் முதன்மை உணவுமுறை இதுவல்ல.

ஏற்கெனவே எடைக்குறைப்புக்காக மருத்துவரின் வழிகாட்டுதலின்படி முயற்சி செய்கிறவர்களுக்கு இது  கூடுதல் பலமாக அமையும். இதன்மூலம் நாள்பட்ட அழற்சியைக் குறைக்க முடியும். அது உங்களின் எடைக்குறைப்புக்கும் உதவி செய்யும்.

எடைக்குறைப்பு என்பது ஒருவரது உடலின் வளர்சிதை மாற்றம் ஒத்துழைக்கும்போதும், அழற்சி குறையும்போதும் நிகழும் ஒரு மாற்றம். இதன் பலன்கள் தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.

தகுதிபெற்ற மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் வழிகாட்டுதலின்படியே இந்த டயட்டை பின்பற்ற வேண்டும். தனிநபருக்கேற்ப இந்த உணவுமுறை பிரத்யேகமாகவும், எடைக்குறைப்பில் தனிநபரின் நோய் எதிர்ப்புத்தன்மை, நாள்பட்ட நோய் பற்றிய கவனம் போன்றவற்றின் அடிப்படையில் மருத்துவரின் உதவியுடன் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: சதயம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் மேல்முறையீடு கூடாது : எடப்பாடி பழனிசாமி

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: திருவோணம்!

வழக்கறிஞரை வெட்டிய குமாஸ்தா : பின்னணி என்ன?

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: பூராடம்!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: மூலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share