வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ படத்தின் ஹீரோவை மாற்றப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தில் இயக்குநராக அறிமுகமான வெற்றி மாறன் தொடர்ந்து அவர் நடிப்பில் ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.
தற்போது ‘விடுதலை 2’ படத்தின் ஷூட்டிங்கில் வெற்றிமாறன் பிஸியாக உள்ளார். மறுபுறம் சூர்யா ‘கங்குவா’ படத்தில் பிஸி.
இந்த படத்திற்கு பிறகு பேன் இந்தியா படமான ‘கர்ணா’ மற்றும் சுதா கொங்கராவின் அடுத்த படம் என அவருக்கும் படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
2௦2௦-ம் ஆண்டு ‘வாடிவாசல்’ படத்தின் அறிவிப்பு வெளியானாலும் கூட இன்னும் ஷூட்டிங் போக முடியாமல், இழுபறி நிலையே நீடித்து வருகிறது.
இடையில் ‘பருத்திவீரன்’ விவகாரத்தால் அமீர் இந்த படத்தில் நடிப்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அமீருடன் புகைப்படம் எடுத்து அவர் படத்தில் இருப்பதை வெற்றிமாறன் உறுதி செய்தார்.

இந்த நிலையில் படத்தின் ஹீரோ மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக சூர்யாவிற்கு பதிலாக தன்னுடைய ஆஸ்தான ஹீரோ தனுஷை இந்த படத்தில் நடிக்க வைத்திட, வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் சமீபத்திய நிலவரத்தின்படி சூர்யா தான் படத்தின் ஹீரோ அதில் எந்தவொரு மாற்றமுமில்லை. ‘விடுதலை 2’ படத்தை வெற்றிமாறன் முடித்ததும், செப்டம்பர் மாதத்தில் இருந்து ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷும், ஒளிப்பதிவாளராக வேல்ராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
பிற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்த விவரங்களை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழி: ஸ்டாலின் பெருமிதம்!
ராமர் இல்லாமல் இந்தியாவை கற்பனை கூட செய்ய முடியாது : அமித்ஷா
